மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தலைவா போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் விஜய்.
சமீபத்தில் இவர் இயக்கிய சைவம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்தை பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சைவம் பட வெற்றிக்குப்பிறகு நல்ல கதை கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்பு எனக்கு அதிகமாகிவிட்டது. என விஜய் தெரிவித்துள்ளார். எனது அடுத்தபடத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார்.
இந்த படம் காமெடி கலந்த ஒரு காதல் படம் என அவர் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 comments:
Post a Comment