படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களை மையமாக வைத்து பல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதேப்போல் ஒரு இளைஞனின் வாழ்க்கையை படமாக எடுத்திருக்கிறார் வேல்ராஜ்.
நடுத்தர குடும்பத்தைச்சேர்ந்த தனுஷ் சிவில் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். தனுஷின் தம்பி 1 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். தனுஷின் அப்பாவாக வரும் சமுத்திரக்கனி தனுஷை எந்த நேரமும் திட்டிக்கொண்டே இருந்தாலும் அம்மா சரண்யா தனுஷ்க்கு ஆதரவாக இருக்கிறார். தனுஷின் பக்கத்துக்கு வீட்டில் புதிதாக குடிவருகிறார் அமலா பால். பிறகு அமலா பாலுக்கும் தனுஷுக்கும் காதல் தீ பற்றிக்கொள்கிறது. அந்த சமயத்தில் தனுஷின் அம்மா சரண்யா இறந்துவிடுகிறார்.
இறந்து போன சரண்யாவின் நுரையீரல் தானத்தால் புது வாழ்வு பெறும் சுரபியின் அப்பா மூலம் தனுஷுக்கு அவர் நினைத்த வேலை கிடைக்கிறது. 200 கோடி ரூபாய் மதிப்பில் அரசு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்படும் கட்டிடத்திற்கு தனுஷ் பொறுப்பேற்கிறார். அந்த இடத்தின் போட்டி நிறுவனம் தனுஷின் திட்டத்தை முறியடிக்க பல முயற்சிகளை கொண்டுவருகிறது. தனுஷ் அரசு கட்டிடத்தை அவர் கட்டிமுடித்தரா அல்லது பழையபடி வேலையில்லா பட்டதாரியாக ஆனாரா என்பது தான் மீதிக்கதை
தனுஷின் அப்பாவாக வரும் சமுத்திரக்கனி ஒரு நடுத்தரக்குடும்ப அப்பாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். சரண்யா வழக்கம்போல் அம்மா கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.பல் மருத்துவராக அமலா பால் தனுஷ் சொல்ற மாதிரி 'சினிமா நடிகை மாதிரி இல்லைன்னாலும், சீரியல் நடிகை மாதிரிதான்' அமலா பால் தெரிகிறார்.
தனுஷுன் முந்தையப் படங்களை நினைவூட்டும் கதைக்களம் தான் என்றாலும் மக்களைச் சிரிக்கவைப்பதோடு சிந்திக்கவும் வைத்திருக்கிற படத்தைக் கொடுத்திருக்கிறார் தனுஷ்..

0 comments:
Post a Comment