[ads1] கும்கி படத்தின் மூலம் அறிமுகமான விக்ரம் பிரபு அதன் பிறகு இவன் வேற மாதிரி படத்தில் நடித்தார். தற்போது தேசிங்கு ராஜா படத்தை இயக்கிய எழில் இயக்கும் அ டுத்த படத்தில் கிராமத்து இளைஞனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக வருத் தபடாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். எழில் இயக்கும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அடுத்த வாரத்திலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
டி.இமான் இசையில் 5 பாடல்கள் தயாரகிவிட்டது. இப்படத்தைப்பற்றி இயக்குனர் எழிலிடம் கேட்டபோது மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா படத்தைப்போல் கிராமத்து காமெடி கதைதான், இந்த படத்தில் விக்ரம் பிரபு கிராமத்து இளைஞனாக நடிப்பதோடு நல்ல காமெடியும் செய்கிறார் என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment