[ads1] கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 55வது படத்தில் இன்னெரு நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜீத் முதல் கெட்டப்பில் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார், அதில் அணுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்.
முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இரண் டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கயிருக்கிறது. இதில் இளவட்ட அஜீத்தாக இன்னொரு கெட்டப்பில் நடிக்கிறார். அந்த அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது.
ஜீ, கிரீடம், மங்காத்தா என மூன்று படங்களில் நடித்தவர் த்ரிஷா. தற்போது மீண்டும் அஜீத்துக்கு நாயகியாக களமிறங்கியிருக்கும் த்ரிஷா, அனுஷ்காவை விட பாடல் காட்சிகளில் படுகவர்ச்சியாக வருகிறாராம்.

0 comments:
Post a Comment