தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி. ஹன்சிகா, தமன்னா போன்ற நடிகைகளின் கவர்ச்சிக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல் போனதால் தற்போது கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார்.
அஞ்சலிக்கு பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இதனையடுத்து சூர்யா நடித்த சிங்கம்2 படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருந்தார். அதன் பிறகு தெலுங்கில் அவருக்கு மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதால் பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியை வாரி வழங்க தயாராகிவிட்டார். ஒரு பாடலுக்கு 2 கோடி வரை சம்பளம் தரவேண்டும் என அவர் அதிரடி ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார்.

0 comments:
Post a Comment