Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

நாளை முதல் கோச்சடையான் முன்பதிவு - மே23ல் வெளியாகிறது

♠ Posted by Galleryrub in ,, at 09:50
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் வரும் மே23ல் வெளியாகிறது. இதற்க்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

இதற்க்கு முன் கடந்த 9ம் தேதி வெளியிட இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் சில காரணங்களிலால் வரும் 23ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இப்படம் 6 மொழிகளில் 2டி வடிவத்தில் தயாராகி தணிக்கை செய்து வெளியிட தயாரனது. இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய முன்று மொழிகளில் 3டி முறையில் தயாராகி தணிக்கை செய்து வரும் 23ல் வெளியாக உள்ளது. இம்முறை உறுதியாக வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.

கோச்சடையான் படம் உலகம் முழுவதும் சுமார் 6000 திரையரங்குகளில் வெளிவர உள்ளது. தமிழகத்தில் மட்டும் 500 திரையரங்குகளில் திரையிட உள்ளது. இப்படம் பிரம்மாண்டமாக திரையிடுவதற்க்காக திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை அழைத்து பேசியுள்ளது ஈராஸ் நிறுவணம்.

கடந்த முறை முன்பதிவின் போதே இரண்டு மணி நேரத்தில் சுமார் 1,25,000 விற்று தீர்ந்தன. பிறகு நிறுத்தப்பட்டு மீண்டும் நாளை துவங்குகிறது.

படம் வெற்றிபெற மோர்தமிழ்.காமின் வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment