Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

என்னமோ ஏதோ சினிமா விமர்சனம்

♠ Posted by Galleryrub in , at 02:07
yennamo-yedhoபலத்த எதிர்ப்பார்ப்புடன் கடல் படத்திற்குப்பின் கவுதம் கார்த்திக் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் என்னமோ ஏதோ. அலமொதயந்தி என்ற தெலுங்கு படத்தின் கதையைத்தான் தமிழில் மறுபடியும் உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தில், கவுதம் கார்த்திக்கிற்கு தனது காதலை சொல்ல தெரியததால் பல கன்னிப்பெண்கள் அவரிடம் இருந்து நழுவி போகின்றனர். அப்படி நழுவிபோன ஒரு பெண்ணின் கல்யாணத்திற்கு சென்ற கவுதமின் கண்ணில், அதே கல்யாணத்தில் மணப்பையனாக தன் காதலனைத் தொலைத்த ராகுல் ப்ரீத்சிங் படுகிறார். காதல் தோல்வியில் இருந்த ராகுல் ப்ரீத்சிங் கவுதமுடன் நட்பாகிறார் பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறுகிறது ஆனால் அப்பொழுதும் தனது காதலை சொல்லதெரியாமால் தினறுகிறார் கவுதம், இதேபோல் பல தடைகளை கடந்து அவரது காதல் சேர்ந்ததா? இல்லையா? என்பதுதான் மீதிகதை.

தனது தந்தை கார்த்திக் போல் இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார் ஆனால் பாடல் காட்சிகளில் கைகூடிய நடிப்பும் துடிப்பும் படகாட்சிகளில் அவருக்கு கை கூடுக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் அவர்கள் ராகுல் பிரீத்சிங், நிகிஷா பட்டேல் இருவருமே இளமை துடிப்பில் அருமை ஆனால் நடிப்பில் பரவயில்லை, அழகம் பெருமாள், மதன்பாய், அனுபமா குமார், சுரேகாவாணி, ரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கோபி ஜெகதிஷ்வரனின் ஒளிப்பதிவு சிறப்பு மற்றும் டி-இமானின் செட் அப் யுவர் மவுத், நீ என்ன பெரிய அப்பா டக்கரா உள்ளிட்ட பாடல்கள் படத்தின் பலத்தை அதிகப்படுத்தியுள்ளது.

அனுபமா குமாரின் காதல் கல்யாண கலாட்டா, அந்த விஷயத்தில் சொட்டை தலையினர் கில்லாடி, காதல் கல்யாணத்தில் நாயகிக்காக பண்ணும் மிமிக்கிரி போன்ற சுவாரஸ்யங்கள் இருந்தாலும் படம் இழுத்து கொண்டே போவது ஒரு குறை.

ரவிதியாகராஜனின் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் என்னமோ ஏதோ இருக்கிறது.

ஒரு முறைப் பார்க்கலாம்,

0 comments:

Post a Comment