♠ Posted by Galleryrub in Cinema,Movie Review at 02:05
காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கிய பாலாஜி மோகனின் இரண்டாவது படம். கதை, திரைக்கதை என வித்தியாசமான முறையில் அசத்தி இருக்கிறார்.
பனிமலை என்கிற ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் துல்கர் சல்மான். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தன் மனதில் உள்ளதை "பளிச்"சென்று பேசுபவர்.
இந்நிலையில் இந்ந ஊரில் ஒரு வித்தியாசமான நோய் பரவுகிறது. இந்நோயால் பல பேர் பேசும் சக்தியை இழக்கிறார்கள்.இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை யாரும் ஊரை விட்டு வெளியே போகக்கூடாது, யாரும் பேசக்கூடாது என அரசு உத்தரவு போடுகிறது.
நாயகி நஸ்ரியா அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிகிறார். நஸ்ரியாவுக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்கிறார்கள்.
இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நஸ்ரியா துல்கர் சல்மான் மீது காதல் ஏற்படுகிறது. நஸ்ரியாவும் துல்கர் சல்மான்வும் தங்கள் காதலை வெளிப்படுத்த முடியாமல் தயங்கி வருகிறார்கள்.
இறுதியில் தங்கள் காதலை பகிர்ந்துகொண்டார்களா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், தனது முதல் படத்திலேயே சொந்தக்குரலில் தமிழில் பேசி சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் துறு துறு இளைஞனாக வலம் வருகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சராக வரும் பாண்டியராஜன் தனது நகைச்சுவையான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.
நீண்ட இடைவேளைக்குப்பிறகு வந்திருக்கும் மதுபாலா தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் வசனம் இல்லாததால் பின்னணி இசை மூலம் படத்தை நகர்த்தி செல்கிறார்கள்.
வாயை மூடி பேசவும் & புதிய முயற்சி

0 comments:
Post a Comment