Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

வடகறி திரை விமர்சனம்

♠ Posted by Galleryrub in ,, at 23:17
வடகறி, வடகறி திரை விமர்சனம், வடகறி சினிமா விமர்சனம், vadacurry movie review

சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு ஜெய், சுவாதி நடித்து சரவணராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது "வடகறி" திரைப்படம்.

இந்த படத்திற்கும் ஆப்பிள் iphone க்கும் சம்பந்தம் இருக்கிறது. அதனால் தான் படத்தின் டைட்டிலில் ஆப்பிள் சிம்பிள் உள்ளது.

நல்ல செல்போன் வைத்து இருப்பவர்களைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க என்று ஆர்.ஜே.பாலாஜி அறிவுரை கூறுகிறார். இதனால் ஒரு நல்ல விலையுயர்ந்த செல் போன் வாங்க நினைக்கிறார் ஜெய். ஆனால் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக மொபைல் வாங்க முடியாமல் போய்விடுகிறது.

பிறகு ஒரு டீக்கடையில் கிடக்கும் ஐபோனை கண்டெடுக்கிறார். அந்த போனை சம்பந்தபட்டவரிடம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார் ஜெய். ஆனால் அவருடைய நண்பர்கள் அறிவுரைப்படி சிம் கார்டை மாற்றிவிட்டு போனை அவரே வைத்துக்கொள்கிறார். பிறகு மனம் மாறும் ஜெய் போனை சம்பந்தபட்டவரிடம் கொடுப்பதற்காக தன்னுடைய சிம் கார்டை மற்றும் போது ஒரு போன் வருகிறது. அதன் பிறகுதான் பிரச்சனை வருகிறது. அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.

முதல் பாதியில் காமெடியாகவும், இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்கிறார் இயக்குனர் சரவணராஜன்

R.J பாலாஜி காமெடி வசனங்களும், சுவாதியின் காதல் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது.

ஒரு காட்சியில் அடிவாங்கி உடம்பில் ரத்தக்கரையோடு வரும்  ஜெய்யை பார்த்து "என்ன இது லிப்ஸ்டிக் கறை" என்று சுவாதி கேட்பது செம ரகளை. அதற்க்கு காண்டாகி "அடிச்சு வாயை கிழிச்சுட்டானுங்க, உனக்கு லிப்ஸ்டிக் மாதிரி தெரியுதா?"னு கேட்கறது இது போன்ற சில காட்சிகள் நம்மை ரசிக்கும்படி உள்ளது.

கதை பெருசா சொல்லும்படி ஒன்றும் இல்லை, முதல்பாதிக்காவும் காமெடிக்காகவும் பார்க்கலாம்­­­­

0 comments:

Post a Comment