கே.எஸ் ரவிக்குமார் இயக்கி வரும் லிங்கா படத்தில் தாத்தா, பேரன் என்று இரண்டு மாறுபட்ட வேடங்களில் ரஜினி நடிக்கிறார். மேலும் இப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இப்படத்தில் பல புதுமையான விஷயங்களை சேர்த்துள்ளார்.
படத்தின் வசன காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது பாடல் காட்சிகளை படமாக்குகிறாராம். பொதுவாக ரஜினி நடிக்கும் படங்களின் பாடல் காட்சிகளில் பல கெட்டப்புகளில் வருவார், ஆனால் இந்த படத்தில் இதுவரை வெளியிடப்படாத 4 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறாராம், இந்த பாடலில் இவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா அசத்துகிறாராம்.

0 comments:
Post a Comment