Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

மஞ்சப்பை திரை விமர்சனம்

♠ Posted by Galleryrub in , at 07:09
Manjapai-Tamil-Movie-Review

விமல், லட்சுமி, மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த காதல் நகைச்சுவையும் கலந்த திரைப்படம். பொதுவாக ஒரு கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பெரியவர்களை மஞ்சப்பை என்று கிண்டல் செய்வதுண்டு, ஆனால் அவர்களிடம் அனுபவ அறிவு மற்றும் அட்வைஸ் எப்பவுமே நமக்கு தேவைப்படும் என்பதை உணர்த்தும் கதைதான் இந்த மஞ்சப்பை.

விமல் ஒரு ஐ டி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறார். கண் டாக்டர் லட்சுமிமேனனை விமல் காதலிக்கிறார். சிறு வயதில் தாய் தந்தையை இழந்த விமலை அவருடைய தாத்தா வெங்கடசாமி (ராஜ்கிரண்) வளர்த்து வந்தார். தன்னுடைய தாத்தாவை சென்னைக்கு அழைத்துவந்து ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்டில் தங்க வைக்கிறார்.

ராஜ்கிரணின் அப்பாவித்தனமான சில செயல்களால் விமலின் காதலி லட்சுமிமேனன் உள்பட அப்பார்ட்மெண்ட்டில் உள்ள அனைவருக்கும் ராஜ்கிரண் மீது வெறுப்பு உருவாகிறது.

அமெரிக்கா தூதரகத்தில் தாத்தா செய்யும் சேட்டையால் விமல் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு பறிபோகிறது. இதனால் விமலும் தாத்தாமீது கோபம் கொள்கிறார்.

இதனால் தாத்தா கோபத்தில் வீட்டைவிட்டு வெளியே போய்விடுகிறார். தன் தவறை உணர்ந்த விமல் தாத்தாவை தேடுகிறார். தாத்தா வெங்கடசாமி கிடைத்தாரா? அவர் எல்லோர் மனதில் இடம் பிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் நாயகன் போல் வரும் ராஜ்கிரணின் நடிப்பு பாராட்டும்படி உள்ளது .
விமலின் நடிப்பும், பாடல்களில் வரும் நடனமும் ரசிக்கும்படி உள்ளது. (இன்னும் பயிற்சி வேண்டும்).

ரகுநாதனின் இசை இளையராஜாவின் கிராமத்து இசையைப்போல் கொண்டுவந்திருக்கிறார். SPB யின் குரலில் பாடல்கள் செம கிக்.

மஞ்சப்பை - ராஜ்கிரணின் நடிப்புக்காக பார்க்கலாம்

0 comments:

Post a Comment