Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

சதுரங்க வேட்டை திரை விமர்சனம்

♠ Posted by Galleryrub in ,, at 02:56
சதுரங்க வேட்டை திரை விமர்சனம், sathuranga vettai movie review, சதுரங்க வேட்டை சினிமா விமர்சனம்

எளிய முறையில் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறார்  நட்டி என்கிற நட்ராஜ், இந்த உலகத்தில் பணம் சம்பாதிப்பதைவிட தன்னைப்போல் பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்களை எப்படி ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் கதை

தன்னுடைய முதல் கைவரிசையை மளிகை கடைக்காரர் இளவரசிடம் இருந்து ஆரம்பிக்கிறார் ஒரு சாதாரண பாம்பை மருத்துவ குணம் கொண்ட பாம்பு, இதன் மூலம் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி இளவரசிடமிருந்து 10 லட்ச ரூபாய்க்கு விற்று இந்த ஊரை விட்டு கிளம்புகிறார்.

பிறகு எம்.எல்.எம் என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் பல பேரை இணைத்து பல லட்சங்களை அபேஸ் செய்கிறார். பாத்ரூம் குழாயில் தண்ணீரை பிடித்து அதை அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மூலிகை தண்ணீர் என்று சொல்லி விற்பனை செய்கிறார் நட்டி. மக்களும் அதை ஆயிரம் ஆயிரமாக கொடுத்து வாங்குகிறார்கள்.

அப்பாவி பெண்ணாக வரும் கதாநாயகி இஷாரா நட்டியை ஒரு தலையாக காதலிக்கிறார். ஒரு அனாதை காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு நட்டியிடம் கூறுகிறார். உதவி செய்யும் நட்டி பிறகு அதையும் தனது ஏமாற்று வேலைக்கு பயன்படுத்திக்கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் நட்டி மீது சிலருக்கு சந்தேகம் வர அவர் அணைத்து பணத்தையும் சுருட்டிக்கொண்டு கிளம்புகிறார். பிறகு போலீசிடம் மாட்டிக்கொள்ளும் நட்டி பணத்தை கொடுத்து விடுதலையாகிறார்.

அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நட்டியை ஆட்களை வைத்து கடத்துகிறார். உயிருக்கு பயப்படும் நட்டி எல்லா பணத்தையும் திருப்பி தந்துவிடுகிறேன் என்று சொல்லி அவர்களையும் ஏமாற்றிவிட்டுப்போகிறார். பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பது மீதிக்கதை

அறிமுக இயக்குனர் வினோத் தனது முதல் படத்தை பிரமாதமாக இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சீன் ரோல்டன் பின்னணி இசையில் முழு சதம் அடித்திருக்கிறார்.

சதுரங்க வேட்டை - சத்தமில்லாமல் நமது மக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு எச்சரிக்கையாகவும் எடுத்துள்ள படம்

0 comments:

Post a Comment